உலகம் முன்னேறுவதை ஒருதலைப்பட்சவாதம் தடுக்கும்
அதிகரித்து வரும் ஒருதலைப்பட்சவாதமும் பொருளாதார பாதுகாப்புவாதமும் உலக வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்து கிறது என சீன சிந்தனையாளர் குழு தலைவர் வாங் ஹுய்யாவோ கூறினார். அமெரிக்காவால் போடப்படும் அதிக வரிகள், பொருளாதார தடை கள், தொழில்நுட்ப தடைகள் வளரும் நாடுகளின் வர்த்தகத்தை கடுமையாக பாதிப்பதுடன் வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் உலகளாவிய முன்னேற்றத்தை குறைமதிப் பிற்கு உட்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அவையை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட ஹவுதி
ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணி யோ குட்டரெஸ் அமெரிக்காவின் விருப்ப த்துக்கு ஒத்துப்போவதாகவும் மனிதாபிமான உதவிகளை அரசியலாக்குவதாகவும் ஏமன் ஹவுதி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. வின் உதவிகள் ஏமனில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதாபிமான உதவியை அமெ மெரிக்கா தலைமையில் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
வர்த்தகப் பதற்றங்களை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் அவரது பேட்டியில், உலகப் பொருளாதாரம் தற்போது புதிய பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சிகள் காரணமாக நாடுகளின் நிதிக்கொள்கை இருப்புகள் (policy buffers) குறைந்துவிட்டன. பொருளாதார உறுதித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
புர்கினோ பாசோவில் ஆட்சிக் கவிழ்ப்பு தடுப்பு
புர்கினா பாசோ ஜனாதிபதி இப்ராஹீம் தரோர் மீது ஏப்.16 அன்று தாக்குதல் நடத்துவது அதே நாளில் நாடு முழுவதும் கலவரங்கள், பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் கண்டறியப்பட்டு தகர்க்கப் பட்டது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச் சர் மகமது சானா தெரிவித்தார். பிரான்சுக்கு விசு வாசமான ஜனாதிபதியான அலசானே ஒட்டாரா ஆட்சி நடத்தும் ஐவரி கோஸ்ட் நாட்டில் இருந்து இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
பாதுகாப்பு வளையத்திற்குள் ரோம் நகரம்
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு சனி யன்று நடைபெற உள்ள நிலையில் ரோம் நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற் குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இறுதிச் சடங்கில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, பிரா ன்ஸ் ஜனாதிபதி மக்ரோன் என சுமார் 130 நாடு களின் தலைவர்கள் கலந்து கொள்வதற்காக ரோம் நகருக்கு வரவுள்ள நிலையில் 4,000 வீரர் கள், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், வான் வழி தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகள் என அனை த்தும் தீவிரமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகளால் வந்த வினை
மேற்கு நாடுகளின் சூழ்ச்சியை பகிரங்கப்படுத்திய பாக். அமைச்சர்
இஸ்லாமாபாத், ஏப்.25- இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான நிலைமை மோசமாகி வரும் சூழலில் தங்கள் நாட்டில் பயங்கரவாதம் வளர்ந்தற்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் தான் காரணம் எனவும். இது அவர்களால் வந்த வினை தான் எனவும் போட்டு உடைத்துள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்புதுறை அமைச்சர் குவாஜா எம் ஆசிஃப். இங்கிலாந்தை சேர்ந்த தனியார் செய்தி நிறுவ னத்துக்கு கொடுத்த பேட்டியில், பாகிஸ்தானின் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் ஆதரவளித்த வரலாறு உள்ளதா செய்தியாளர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதில ளித்த ஆசிஃப் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளுக்காக கடந்த 30 ஆண்டுக ளுக்கு மேலாக இந்த மோசமான வேலைகளை செய்ததாக அவர் தெரிவித்தார். மேலும் அது “தவறு” என்றும் அதனால் பாதிக் கப்பட்டது எங்கள் நாடு தான் எனவும் கூறினார். சோ வியத்-ஆப்கன் போரின்போதும், அமெரிக்கா வில் இரட்டை கோபுர தாக்குதல், அமெரிக்கா தலை மையிலான தலிபான்களுக்கு எதிரான போரின் போதும் பாகிஸ்தான் மேற்குலக நாடுகளுடன் அணி சேராமல் இருந்திருந்தால் பாகிஸ்தானின் வளர்ச்சி யாரும் மறுக்க முடியாத வகையில் இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சோவியத்-ஆப்கன் போரில் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் சோவியத் யூனியனுக்கு எதிராகப் போரிட ஆயுத கிளர்ச்சியாளர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்தது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது முழு அளவிலான போரை நடத்தி வந்த போது அமெ ரிக்க ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் முக்கிய இடத்தில் பாகிஸ்தான் இருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் வளரும் நாடுகளில் பண உதவி கொடுத்து பயங்கரவதத்தை வளர்த்து விடும் வேலையை பல ஆண்டுகாலமாக செய்து வருகின்றன. இதனடிப்படையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் துவங்கி ஆப்ரிக்க நாடுகள் வரை பயங்கரவாதம் பரவியுள்ளது. இந்த பயங்கரவாதம் உள்நாட்டில் பயங்கர வாத தாக்குதல் நடத்தி குழப்பத்தை விளைவிப்ப துடன் அண்டை நாடுகளுடன் மோதலையும் தூண்டி வருகிறது. இந்நிலையில் பாக் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பேட்டி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரு வதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அம்பலப் படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.