இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கத்தால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுவருகின்றனர்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பெக்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெகாசி மாவட்டத்தில் நான்கு கிராமங்களிலும், கரவாங் மாவட்டத்தில் 34 கிராமங்களிலும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ரதித்யா ஜதி தெரிவித்தார்.
மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.