world

img

பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு தடை: இஸ்ரேல் நாடாளுமன்ற முடிவுக்கு ஐ.நா., கண்டனம்

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (United Nations Relief and Works Agency for Palestine Refugees  n the Near East - UNRWA) இஸ்ரேலில், செயல்படத் தடைவிதிக்கும் மசோதாவை நிறைவேற்றி அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.  இந்த மசோதா சட்டமாக இயற்றப் பட்டால் யுஎன்ஆர்டபிள்யுஏ  மூன்று மாதங்க ளுக்குள் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருக்கும் கிழக்கு ஜெருச லேமில் அதன் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். முக்கிய மாக யுஎன்ஆர்டபிள்யுஏ பாலஸ்தீன அகதி களுக்காகச் செயல்படுகிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், யுஎன்ஆர்ட பிள்யுஏ ஊழியர்கள் இஸ்ரேல் அதிகாரி களுடன் தொடர்பை இழக்க நேரிடும். இதனால் காசா மற்றும் இஸ்ரேல் ஆக்கிர மிப்பில் உள்ள மேற்குக் கரையில் யுஎன்ஆர் டபிள்யுஏ அமைப்பின் செயல்பாடுகள் குறையக்கூடும். போர் பிராந்தியமாக உள்ள காசாவில் உள்ள அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் படைகள் கட்டுப்படுத்துகின்றன. இதனால் போர் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக ளுக்கு உதவிப் பொருட்களை வழங்குவ தற்கு யுஎன்ஆர்டபிள்யுஏ-வுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. இந்தப் பகுதிகளில் களத்தில் பணிபுரியும் ஐ.நா-வின் முக்கிய அமைப்பாக யுஎன்ஆர்டபிள்யுஏ உள்ள நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இஸ்ரேலில் உள்ள யுஎன்ஆர்டபிள்யுஏ பணியாளர்களுக்கான சட்டப்பாதுகாப்பு முடிவுக்கு வரும். மேலும் கிழக்கு ஜெருச லேமில் உள்ள இந்த அமைப்பின் தலைமை அலுவலகமும் மூடப்படும். ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை இந்நிலையில், இஸ்ரேல் நாடாளு மன்றத்தின் இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் கூறுகை யில்,”பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு தடை விதிக்கும் இஸ்ரேல் நாட்டின்  இந்தச் சட்டம், இஸ்ரேல்-பாலஸ்தீன போருக்கான தீர்வு மற்றும் அந்தப் பகுதி யின் அமைதி, பாதுகாப்பிற்கு தீங்கு விளை விப்பதாக இருக்கும்,” எனக் கூறினார்.  அதே போல, “இஸ்ரேல் நாடாளுமன்றத் தின் இந்த முடிவு பாலஸ்தீனர்களின் பிரச்ச னையை மேலும் அதிகரிக்கவே செய்யும்” என யுஎன்ஆர்டபிள்யுஏ தலைவர் பிலிப் லஸ்ஸரினி குற்றம் சாட்டியுள்ளார்.