புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைவு, ரெம்டெசிவிர், கொரோனா தடுப்பூசிக்குதட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளும் உள்ளன. இதையடுத்து இந்தியாவுக்குஅமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் உதவி செய்து வருகின்றன.இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை 75-வது கூட்டத்தொடரின் தலைவர் வோல்கன் போஸ்கிர் தனது டிவிட்டரில், உலகம் இந்தியாவிற்கு உதவநேரம் வந்துவிட்டது. நலிவடைந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்குபல்வேறு உதவிகள் செய்த இந்தியாவின் தற்போதைய சூழல் கண்டு வேதனை அடைந்துள்ளேன். உலகம் இந்தியாவுக்கு நிவாரணம் வழங்கி உதவ வேண்டிய நேரம் இது . தமது எண்ணங்கள் இந்தியாவுடனும் இந்தியமக்களுடனும் உள்ளன என்று தெரிவித்துள்ளார். இதற்கு, ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் டி.எஸ் திருமூர்த்தி, இத்தகைய காலகட்டத்தில் உங்களின் உணர்வுகளையும் ஒற்றுமை பண்பையும் இந்தியா மிகவும் பாராட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.