அமெரிக்காவைச் சேர்ந்த Barber Law Firm வெளியிட்ட ஆய்வில், உலகளவில் செல்ஃபி எடுக்கும் போது அதிகம் உயிரிழப்புகள் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2014 மார்ச் முதல் 2025 மே மாதம் வரை நடைபெற்ற சம்பவங்களை ஆய்வு செய்ததில், இந்தியாவில் மட்டும் 271 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 214 பேர் உயிரிழந்துள்ளனர்; 57 பேர் காயமடைந்துள்ளனர். இது உலகளாவிய செல்ஃபி மரணங்களில் 42.1% ஆகும்.
இந்தியாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா (45 சம்பவங்கள்), ரஷ்யா (19), பாகிஸ்தான் (16), ஆஸ்திரேலியா (15) ஆகியவை இடம்பிடித்துள்ளன.
ஆய்வில், செல்ஃபி எடுக்கும் போது நிகழும் உயிரிழப்புகளில் 46% உயரத்திலிருந்து விழுதலே முக்கிய காரணம் எனவும், பள்ளத்தாக்குகள், மலை உச்சிகள், கட்டிடங்கள் போன்ற இடங்களில் இது அதிகம் நிகழ்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது