world

img

புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறை உருகுகிறது ....  ஆராய்ச்சிக்குழு தலைவர் எச்சரிக்கை....

பெர்லின்:
புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறை உருகத் தொடங்கியுள்ளது என்று இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் குழுவின் தலைவர் மார்கஸ் ரெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்க்டிக் பிராந்தியத்தின் வடதுருவத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த 300 விஞ்ஞானிகள் பேராசிரியர் ரெக்ஸ் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.இக்குழுவினர் இப்பகுதியில் 389 நாள்கள் ஆராய்ச்சி செய்து கடந்த ஆண்டு அக்டோபரில் ஜெர்மனி திரும்பினர். 

இதுகுறித்து மார்கஸ் ரெக்ஸ் கூறுகையில், கோடைகாலத்திலும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உருகிய ஐஸ் பாளங்கள் இப்போது மறைந்துள்ளது என்பது பனி உருகுவதன் முதல் அடையாளமாகும்.பனிப்பாறைகள் அடங்கிய சுரங்கப் பகுதியின் முனைகள் உருகத் தொடங்கியுள்ளது. இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் காலம் அதிக தூரத்தில் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் பனிப் பாறைகள் இல்லாத ஆர்க்டிக் கடல் பகுதி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இக்குழுவினர் தங்களது ஆராய்ச்சியின் முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் இருந்த சூழலைவிட தற்போது சூழல் மாறியுள்ளதாகவும், பனிப் பாளங்கள் ஆர்க்டிக் கடல் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவைக் காட்டிலும் பாதியளவு குறைந்து உருகி விட்டதாகவும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பனி உருகுவதைத் தடுக்க எத்தகைய நடவடிக்கை தேவை என்பது குறித்தும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.