world

img

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவும் மார்பர்க் வைரஸ் - உலக சுகாதார அமைப்பு 

வௌவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் வைரஸின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  எபோலா வைரஸ் போன்ற கொடிய வைரஸான
இந்த மார்பர்க் வைரஸின் பாதிப்பு இதற்கு முன்பு ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, அங்கோலா, கென்யா, உகாண்டா, காங்கோ ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டி
ருந்தாலும், மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறை ஆகும். 

வௌவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, தெற்கு குக்கெடோ மாகாணத்
தில் மார்பர்க் வைரஸ் நோய் காரணமாக இறந்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்குப்படுத்தியதில் இந்த கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மார்பர்க் வைரஸ் பெரிய அளவில் பரவ வாய்ப்பிருப்பதால், அதன் பரவலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். மார்பர்க் வைரஸ் பரவும் ஆபத்து நாட்டளவிலும், பிராந்திய அளவிலும் அதிகமாக இருப்பதாகவும், உலக அளவில் குறைவாக இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.     

கினியாவில் எபோலா நோய் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிய மார்பர்க் வைரஸ்  கண்ட
றியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.