ஆப்கன் தலிபானுடன் தொடர்பு மேற்கொள்வதற்கான 5 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வகுத்துள்ளதாக தூதாண்மை மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான இவ்வமைப்பின் உயர் நிலை அதிகாரி பொலேரி தெரிவித்தார்.ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் செப்டம்பர் 3 ஆம் நாள் ஸ்லோவேனியாவில் நிறைவடைந்தது. இக்கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பொலேரி கீழ்க்கண்ட 5 நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார்.
1. ஆப்கானிஸ்தான் இதர நாடுகளுக்கு பயங்கரவாதத்தைப் பரப்பும் தளமாக இருக்கக் கூடாது என்று தலிபான் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
2. மனித உரிமை குறிப்பாக மகளிரின் உரிமை, சட்ட அடிப்படையிலான நிர்வாகம், ஊடகங்களின் சுதந்திரம் ஆகியவற்றுக்குத் தலிபான் உத்தர வாதம் அளிக்க வேண்டும்.
3. பேச்சுவார்த்தை மூலம் அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவம் வாய்ந்த இடைநிலை அரசை உருவாக்க வேண்டும்.
4. மனித நேய உதவிகளை சுயேச்சையாக ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
5. வாக்குறுதியைப் பின்பற்றி, வெளிநாட்டவர்களும் ஆப்கன் மக்களும் அந்நாட்டிலிருந்த வெளியேற அனுமதிக்க வேண்டும்
என்பவையே இந்த 5 நிபந்தனைகளாகும்.