world

img

பிரிட்டனில் கொரோனா 3-வது அலை?  இந்திய வம்சாவளி  விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்... 

லண்டன் 
ஐரோப்பா கண்டத்தில் உள்ள இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதியாக இருக்கும் பிரிட்டனில் கொரோனா வைரஸ் தனது மூன்றாவது அலையை தொடங்கியுள்ளதாக இந்திய வம்சாவளி விஞ்ஞானியும், பிரிட்டன் அரசின் ஆலோசனையருமான கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரவி குப்தா பிபிசி ஊடகத்திற்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். 

அதில்,"கடந்த 5 நாட்களாக பிரிட்டனின் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி பயணித்து வருகிறது. தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இது 3-வது அலையின் ஆரம்ப அறிகுறியாகும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் வகைகளில் 70% இந்தியாவில் இருந்து உருமாறிய வைரஸ் (B.1.617) என அவர் கூறியுள்ளார். 

இந்தியா, பிரேசில், அர்ஜெண்டினா  போன்ற இன்னும் 2-வது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், ரவி குப்தாவின் இந்த செய்தி உலக அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.