துபாயில் நடந்த விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் கீழே விழுந்து விபத்துள்ளானதில் விமானி உயிரிழந்தார்.
துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி நவ.17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இறுதி நாளான இன்று விமான சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானி உயிரிழந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அவரது இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், விபத்துக்கான காரணத்தை அறிய உரிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
தேஜஸ்
இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.2001 ஆம் ஆண்டு முதல் விமான இயக்கப்பட்ட நிலையில் 2003 ஆம் இதற்கு தேஜஸ் என்று பெயரிடப்பட்டது.
2015-ஆம் ஆண்டு முதல் இது விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலகில் இந்தியா உள்பட பல நாடுகளில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது போர் விமானம் விபத்துள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
