india

img

நீதிபதி பதவி அதிகாரத்தின் அலுவலகம் அல்ல! - தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

நீதிபதி பதவி என்பது அதிகாரத்தின் அலுவலகம் அல்ல; அது சமூகத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்யும் வாய்ப்பு என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நவம்பர் 23-ஆம் தேதியன்று ஓய்வுபெறுகிறார். இந்த நிலையில், தனது இறுதி பணி நாளான இன்று, அவருக்கு பிரிவு உபசார நிகழ்வு நடைபெற்றது.
அதில் பேசிய கவாய், "நீதிபதி பதவி என்பது அதிகாரத்தின் அலுவலகம் அல்ல; அது சமூகத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்யும் வாய்ப்பு. அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலைநாட்ட, எப்போதும் முடிந்தவரை நான் முயற்சித்தேன். எளிமையான தீர்ப்புகளை எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவை கடைக்கோடி மக்களுக்காக எழுதப்பட வேண்டும். 1985இல் சட்டம் படிக்க ஒரு மாணவனாகச் சேர்ந்தேன், இன்று பணி நிறைவின்போது நீதித்துறை மாணவனாகவே விலகுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.