world

img

உக்ரைன் போர்: ரஷ்யாவிற்கு சீனா ஆதரவு

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

உக்ரனை  நேட்டோவின் வளையத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது அமெரிக்கா, ஆனால் சோவியத் யூனியனின் முன்னாள் குடியரசான உக்ரனை நேட்டோவின் வளையத்துக்குள் கொண்டுவர ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது.

இந்நிலையில், ரஷ்யா தங்களுடைய நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உக்ரைனை நேட்டோ வளையத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கும் அமெரிக்காவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.

சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான யுத்த தந்திர ரீதியான கூட்டணி சமீப ஆண்டுகளில் மேலும் ஆழமடைந்து வலுப்பெற்றுள்ளது.

உக்ரைன் தொடர்பாக அமெரிக்கா- நேட்டோ மற்றும் ரஷ்யா இடையே பதட்டங்கள் மற்றும் சீனாவை தனிமைப்படுத்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க உந்துதல் ஆகியவற்றின் பின்புலத்தில்தான் டிசம்பர் 2021-இல் ஜி ஜின்பிங்-புடின் சந்திப்பு நடைபெற்றது.

நவம்பர் 2021இல், ரஷ்யா மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புக்கான 2021-25 காலகட்டத்திற்கான தொலைநோக்கு திட்டத்தில் கையெழுத்திட்டனர்.

சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான யுத்த தந்திர ரீதியான உறவுகளை வலுப்படுத்துவது என்பது அமெரிக்க தலைமையிலான மேலாதிக்கக் கூட்டணிக்கு யுத்த தந்திர ரீதியான எதிர்வினையாக இருக்கும் என்று  பேசப்பட்டு வந்த நிலையில், உக்ரனை நேட்டோவின் வளையத்துக்குள் கொண்டு வந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது,எனவே, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என சீனா தெரிவித்துள்ளது.