கனடா,நவம்பர்.09- வெளிநாட்டு மாணவர்களுக்கான விரவி விசாவினை கனடா அரசு திடீரென ரத்து செய்துள்ள சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் விரைவில் விசா பெற உதவியாக இருந்த SDS விசா திட்டத்தை திடீரென கனடா அரசாங்கம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் கனடா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இனி நீண்ட நாள் விசாவிற்காக காத்திருக்க வேண்டும்.
இதுகுறித்து விளக்கமளித்த கனடா அரசாங்கம், அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது.