world

img

நைஜீரியாவில் 110 விவசாயிகள் கொடூர கொலை...  போகோஹராம் தீவிரவாதிகள்  மீண்டும்  அட்டூழியம்... 

நைஜர் 
கடந்த 2009-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் முக்கிய நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து முளைத்த போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு தற்போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பை போன்று கண்டம் முழுவதும் வளர்ந்து வருகிறது. தங்களது கோரிக்கை அரசு நிறைவேற்றா விட்டால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது.

தற்போதைய சூழிநிலையில் நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது சூரியன் உதயம் போன்று வாடிக்கையாகிவிட்ட நிலையில், நேற்று மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் இருந்து வடகிழக்கு பகுதிக்கு வந்து பணிபுரியும் விவசாய தொழிலாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. 

மைடுசூரி அருகே உள்ள கோசிப் என்னும் சிற்றூரில் ஒரே நேரத்தில் 110 விவசாயிகளைக் கடத்தி ஓரிடத்துக்கு கொண்டு சென்று சித்ரவாதையுடன் தலை மற்றும் உடல் உறுப்புக்களை துண்டித்து கொலை செய்துள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.