பிரேசிலில் கொரோனா பெருந்தொற்றை முறையாக கையாளாமல் பெரும் துயரத்திற்கு காரணமாக இருந்த பாசிச ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோவுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்நாட்டின் 26 மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் கூடி கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாவோ பாலோ அந்நகரில் மையப்பகுதியில் சுமார் 70ஆயிரம் பேர் கூடிய போராட்டம் நடைபெற்றது.
பிரேசில் தொழிலாளர் கட்சி, சோசலிஸ்ட் கட்சி, ஜனநாயக தொழிலாளர் கட்சி, சோசலிசம் மற்றும் சுதந்திரக் கட்சி, ஐக்கிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட அனைத்து இடதுசாரி இயக்கங்களும் ஒன்றிணைந்து பொல்சானரோ வெளியேறு என்ற முழக்கத்தை எழுப்பினர்.
உலகில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக மக்களை கொரோனாவுக்கு பலி கொடுத்த நாடு பிரேசில்.
சுமார் 6 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
ஜனாதிபதி பொல்சானரோ, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையிலோ, தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலோ உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மக்களை பலி கொடுத்து வருகிறார் என கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.