பிரேசிலியா:
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி செலுத்தும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலகஅளவில் தினசரி கொரோனா பாதிப்பில்பிரேசில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் அந்நாட்டில்64,903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியா 2-ம் இடம் வகிக்கிறது.