articles

வேலை வாய்ப்பு வீழ்ச்சியும் தனியார்துறை இட ஒதுக்கீட்டின் அவசியமு

வேலை வாய்ப்பு வீழ்ச்சியும்  தனியார்துறை இட ஒதுக்கீட்டின் அவசியமு

உண்மை நிலவரத்தை படம் பிடித்துக் காட்டும் சிபிஐ(எம்) அகில இந்திய மாநாட்டு தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநாடு, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவி னரான பட்டியல் சாதியினர் (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகியோர் தொடர்ந்து சமூக பாகுபாடுகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்து வருகிறார்கள் என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. பொருளாதாரப் புறக்கணிப்பும் பாகுபாடும் சாதி அமைப்பின் மையமாக உள்ளது. இது சாதி அடிப்ப டையிலான சமூக அமைப்பின் முக்கிய விளைவாகும். இந்த சாதிகளைச் சேர்ந்த மக்கள் நிலம் மற்றும் சொத்துக்களின் உரிமையாளர் ஆவதிலும், பல்வேறு தொழில்களில் நுழைவதிலும் பல்வேறு பொரு ளாதாரத் துறைகளில் கட்டுப்பாடுகளையும் புறக்க ணிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். கல்வி உட்பட பல்வேறு சேவைகளை அணுகுவதில் புறக்க ணிப்பு, பொருளாதார புறக்கணிப்புக்கு பெரும் அளவில் இட்டுச் செல்கிறது.

வேலைவாய்ப்பில்  இடஒதுக்கீடு - முக்கியக் கருவி

இந்த சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பரவலான பொருளாதார புறக்கணிப்பு மற்றும் பாகுபாட்டுக்கு எதிராக வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மிக முக்கியமான கொள்கைக் கருவியாக உருவெடுத்துள்ளது. அரசியலமைப்பின் பிரிவுகள் 15(4), 16(4), 46 மற்றும் 335 ஆகியவை எஸ்சி, எஸ்டி  மற்றும் ஓபிசி பிரிவினருக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையை வழங்குகின்றன. இருப்பினும், இந்த விதிகள் அரசு வேலைகளில் மட்டுமே இடஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

அரசு வேலைகளிலும்  மோசமான நிலை

வரலாற்று ரீதியாக, அரசு வேலைகளில் கூட இட ஒதுக்கீடுகள் மோசமான செயல்பாட்டால் பாதிக்கப் பட்டுள்ளன. இடஒதுக்கீடு செய்யப்பட்ட பல பதவிகள் காலியாக உள்ளன. 2023இல், 10 லட்சத்திற்கும் மேற் பட்ட மத்திய அரசுப் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை இடஒதுக்கீட்டுக் குரிய பதவிகள். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுப் பதவிகளிலும் பல இடஒதுக்கீடு பதவி கள் காலியாக உள்ளன.

நவதாராளவாதக் கொள்கைகளால் வீழும் வாய்ப்புகள்

நவதாராளவாதப் பொருளாதார ஆட்சியின் கீழ், இடஒதுக்கீடு கொள்கைகளால் உள்ளடக்கப்பட்ட பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் கடுமையான சுருக்கம் ஏற்பட்டுள்ளது. 1990களில், அனைத்து அரசு வேலைகளிலும் (மத்திய அரசு, மாநில அரசு  மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட) சுமார் 2 கோடிப் பேர் பணி யாற்றினர். 2012க்குள், இது 1.7 கோடியாக குறைந்தது. அதாவது, அந்த காலகட்டத்தில் சுமார் 30 லட்சம் அரசு வேலைகள் குறைக்கப்பட்டன. மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வீழ்ச்சி இன்னும் அதிகமாக உள்ளது. மோடி அரசு, அரசு வேலைவாய்ப்பு குறித்த விரி வான தரவுகளின் வெளியீட்டை நிறுத்திவிட்டது. ஆனால் வெவ்வேறு வகையான அரசு வேலை வாய்ப்புகளில் வேகமான வீழ்ச்சி காணப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் மொத்த வேலைவாய்ப்பு 1990களின் நடுப்பகுதியில் 10 லட்சத்திற்கும் அதிக மாக இருந்தது, 2024இல் வெறும் 7.5 லட்சமாக குறைந்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்க ளில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2014 முதல் 4.5 லட்சத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது - 35 சதவீத வீழ்ச்சி. 2014 முதல், ரயில்வேயில் சுமார் 80,000 பேர், அஞ்சல் துறையில் சுமார் 40,000 பேர் மற்றும் பொ துத்துறை வங்கிகளில் சுமார் 90,000 பேர் எண் ணிக்கை குறைந்துள்ளது.

அதிகம் பாதிக்கப்படுவது ஒடுக்கப்பட்ட பிரிவினரே!

வேலை இழப்பு குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவு களில் அதிகமாக உள்ளது. இங்குதான் ஒப்பந்த முறை மிக அதிகமாக உள்ளது. 2014-15 மற்றும் 2022-23 க்கு இடையே இழக்கப்பட்ட அனைத்து மத்திய அரசு வேலைகளில், 86 சதவீதம் குரூப் சி மற்றும் குரூப் டி ஊழியர்களுடையது. பொதுத்துறை நிறுவனங்களில் வேலைகளை வெளிக்கொடுப்பது (அவுட்சோர்ஷிங்), தனியார் ஒப்பந் ததாரர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பணியாளர்க ளைப் பெறுவது, மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிய மர்த்துவது பரவலாக நடைபெறுகிறது.

கல்வி தனியார்மயமாக்கல் - சிதையும் வாய்ப்புகள்

கல்வி தனியார்மயமாக்கல், அரசு கல்வி நிறுவ னங்களில் ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு அதி கரிக்கவில்லை என்பதை குறிக்கிறது. இதன் விளை வாக, இந்த ஒடுக்கப்பட்ட பிரிவினரில் இருந்து ஆசிரி யர்களின் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. 2023-24இல், பள்ளி ஆசிரியர்களில் 7.7 சதவீதம் மட்டுமே  எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள், 12.6 சதவீதம் எஸ்சி  பிரிவைச் சேர்ந்தவர்கள். எஸ்சி/எஸ்டி ஆசிரியர்களை பணியமர்த்துவதில் தனியார் பள்ளிகளின் பதிவு மிகவும் மோசமாக உள்ளது. தனியார் பள்ளிகளில் 13 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே எஸ்சி/எஸ்டி பிரிவினர்.

பொது முதலீட்டில் வேலைவாய்ப்பு - இடஒதுக்கீடு இல்லை

பொது முதலீட்டைப் பயன்படுத்தி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் பல பகுதிகளுக்கு இட ஒதுக்கீடு கொள்கைகள் விரிவாக்கப்படவில்லை. இதில் திட்ட பணியாளர்கள், அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் அடங்குவர். 2024 பட்ஜெட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்பு தொ டர்பான திட்டங்களை முன்மொழிந்தது. இது 500 பெரிய நிறுவனங்கள் உட்பட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொது நிதியை வழங்குகிறது. இதில் 20 லட்சம் பயிற்சியாளர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்கள் அடங்கும். இந்த திட்டத்தில் சுமார் ரூ. 1.73 லட்சம் கோடி பொதுப் பணம் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தில் எஸ்சி, எஸ்டி அல்லது ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை.

தனியார்மயமாக்கலும் ஒப்பந்த முறையும் - நவதாராளவாதக் கொள்கைகளின் மையம்

தனியார்மயமாக்கலும் ஒப்பந்த முறையும் நவ தாராளவாதக் கொள்கைகளின் மையமாக உள்ளன. இவை வேலைவாய்ப்பின் முறைசாரா தன்மையை ஏற்படுத்தி, சாதி அடிப்படையிலான புறக்கணிப்பு மற்றும் பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கையாக இடஒதுக்கீட்டின் வாய்ப்புகளை சிதைத்துள்ளன.

தனியார் துறைக்கும் இடஒதுக்கீட்டை விரிவாக்க வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநாடு, இடஒதுக்கீடு கொள்கையை முழு ஒழுங்க மைக்கப்பட்ட தனியார் துறைக்கும் விரிவாக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்து பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும் எஸ்சி,  எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.