பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோஸ் நகரில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 94 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஜெர்மனியின் மேயர் ரூபன்ஸ் போம்டெம்போ கூறுகையில், பெட்ரோபோஸ் என்பது ரியோ டி ஜெனிரோவிற்கு மேலே உள்ள மலைகளில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டன. இதில் பலர் காணாமல் போனதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 94 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மொரோ டா ஆஃபிசினாவில் 80 வீடுகள் வரை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சுமார் 300 பேரை பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.