டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப் பட்டு வரும் இனப்படுகொலைக்கு இடைக்கால அரசிற்கு தலைமை வகிக்கும் முகமது யூனுஸ் தான் காரணம் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் சீக்கியர்கள், பௌத் தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடந்து வருகிற தாக்குதல்களை இனப்படுகொலை என குற்றம்சாட்டும் ஹசீனா அதற்கு யூனுஸ் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த பிறகு வங்கதேசத்தின் நிலைமை குறித்து முதல் முறையாக பொதுமக்களுக்கான காணொலி உரையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, முகமது யூனுஸ் அதிகார வெறி கொண்டவர். நான் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் யூனுஸ் மிக நுணுக்கமான விதத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளார். இந்த இனப்படுகொலையின் பின்னணியில் மூளையாக சில மாணவர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் யூனுஸ் ஆகியோர் உள்ளனர்.
அவர் சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறியுள்ளார் எனவும் குற்றம் சாட்டினார். சிறிய அளவிலான கடன்களை வழங்க அவர் உருவாக்கிய கிராமீன் வளர்ச்சி வங்கியின் மூலம் யூனுஸ் ஊழல் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டார் என்று பல ஆண்டுகளாக குற்றச் சாட்டை முன்வைத்து வரும் ஹசீனா தற்போதும் அந்த குற்றச்சாட்டை குறிப்பிட்டார்.
ஒரு மணி நேரம் பேசிய அந்த உரையில் தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானைப் படுகொலை செய்தது போலவே, தன்னையும் தனது சகோதரி ஷேக் ரெஹானாவையும் படுகொலை செய்யத் திட்டமிடப் பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 8 அன்று லண்டனில் நடைபெறும் கட்சி ஆதர வாளர்களின் மற்றொரு நிகழ்ச்சியில் ஹசீனா உரையாற்ற உள்ளார் என அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரி வித்ததாகக் கூறப்படுகிறது.