world

img

ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வங்கதேசம் முயற்சி

டாக்கா, செப். 8 - தமது அரசாங்கத்திற்கு எதி ரான மாணவர் இயக்கத்தின் போது நடந்த படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகளில் விசா ரிக்க, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வங்கதேச அரசின் வழக்குரைஞர் தாஜுல் இஸ்லாம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஹசீனாவை இந்தியாவுடனான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் திரும்பக் கொண்டுவர தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்று தாஜுல் இஸ்லாம் கூறியதாக தி டெய்லி ஸ்டார் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.

“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதி ரான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை நாடு முழுவதும் இருந்து சேகரிக்க வேண்டும், அவற்றை தொகுக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் தீர்ப்பாயத்தின் முன் முறையாக வைக்க வேண்டும், இது மிகவும் சவாலான மற்றும் பெரிய பணியாகும்” என்றும் இஸ்லாம் கூறினார்.

ஹசீனா தலைமையிலான அரசாங் கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையி லான இடைக்கால அரசாங்கம் அமைக்கப் பட்ட பிறகு, முந்தைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முந்தைய நீதிபதிகள், வழக்குரைஞர் குழு மற்றும் விசாரணை முகமை பதவி விலகியதால், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மற்றும் அதன் விசாரணைக் குழுவை புதிய நீதிபதிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளை நியமித்து மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கூறினார்.(பிடிஐ)