காசாவில் ‘பேரழிவை விட மோசமான அழிவு!’ ஐ.நா. மனிதாபிமான அமைப்புகள் வேதனை
காசா, ஆக. 9 - காசாவில், ‘பேரழிவை விட மோசமான அழிவு’ நடந்து கொண்டிருப்பதாக ஐக்கிய நாடு கள் அவையின் மனிதாபிமான அமைப்புகள் தங்களின் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டுள்ளன. பாலஸ்தீனர்களுக்கு தேவையான உண வுப்பொருட்களை ஏற்றிச்செல்லும் நிவாரண வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து வரு கிறது. இதனால் அங்கு மிக மோசமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அம்மக்களும் மிகத் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக் கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை யான மருந்துகள், மருத்துவ உதவிகள், மருத்து வர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால் போதிய உதவிகள் கிடைக்காமல் நூற்றுக்க ணக்கான பாலஸ்தீனர்கள் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். இந்நிலையிலேயே, “ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவ லகம் (OCHA) வெளியிட்ட அறிக்கையில், பாது காப்பான இடங்களை நோக்கி செல்லும் வழி களிலும், மக்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் பலியாகும் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உணவு வாங்க செல் லும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து நடத்தும் துப்பாக்கிச் சூடு காரணமா கவும் இந்த மரணங்கள் ஏற்படுகின்றன” என்று வேதனை வெளியிடப்பட்டு உள்ளது. பட்டினியை மிகக் கொடூரமான ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது வரை உணவின்றி 90 குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனர்கள் பட்டி னியால் பலியாகியுள்ளனர் என காசா சுகா தாரத் துறை அமைச்சகமும் தகவல் தெரிவித்துள் ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை செய் துள்ளது. உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்ட செயற்கைக்கோள் ஆய்வறிக்கை யில், காசாவின் விவசாய நிலங்களில் வெறும் 1.5 சதவிகிதம் மட்டுமே விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளன. எஞ்சிய நிலங்களை இஸ்ரேல் குண்டுவீசி அழித்துள்ளது. 2023-இல் காசா மீதான தாக்குதலை துவங்கியதில் இருந்து இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை, இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது, குறிப்பி டத்தக்கது. காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்! இதனிடையே, காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். காசாவை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தப் போவதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த பிறகு, அதற்கான வேலைகளையே இஸ்ரேல் செய்து வருகிறது. ஏற்கெனவே காசாப்பகுதியின் 50 சதவிகித நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலையில், தற்போது முழு பகுதியையும் ஆக்கிரமிக்கப் போவதாக நேதன்யாகு அறிவித்துள்ளார். காசாவின் கடற்கரையில் ரியல் எஸ்டேட் தொழிலைத் துவங்குவதுடன் அப்பகுதியில் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளை யடிக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
அஜர்பைஜான்- ஆர்மீனியா அமைதி ஒப்பந்தம்
அஜர்பைஜான்-ஆர்மீனியா நாடுகளுக்கு இடையே டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை மோதல் இருந்து வந்தது. இத்தனை ஆண்டுகளாக அப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஆதிக்கமே இருந்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக டிரம்ப் இந்த ஒப்பந்ததை ஏற்படுத்தியுள்ளார். இவ்வொப்பந்தம் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி நல்லுறவை நோக்கி நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரோ தலைக்கு விலை : அமெ.வுக்கு வெனிசுலா கண்டனம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மது ரோவை கைது செய்ய உதவினால் 437 கோடி அளவுக்கு வெகுமதி அளிப்பேன் என டிரம்ப் Tpwயுள்ளார். இதற்கு வெனிசுலா அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஒரு “மோசமான அரசியல் பிரச்சார நடவடிக்கை” என்று வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச் சர் யுவான் கில் கண்டித்துள்ளார். அத்துடன் வெனி சுலாவில் உள்ள தீவிர வலதுசாரி அரசியல்வாதிக ளுக்கு ஆதரவாக இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார் எனவும் விமர்சித்துள்ளார்.
புடினை சந்திக்கப் போவதாக டிரம்ப் அறிவிப்பு
ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி மாளிகை உதவியாளர் யூரி உஷாகோவ் இரு தலைவர்களும் சந்திக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் சந்திப்பு நடக்க உள்ள இடம் மாற்றத்திற்கு உட்பட்டது என தெரிவித்துள்ளார்.
நிலாவில் அணு மின் நிலையம்; நாசா திட்டம்
2030 க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் சூரிய சக்தி, பேட்டரிகளால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், அணு மின் நிலையம் அவசி யமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் பூமியின் வளிமண்டலம் வழியாக அணுக்கதிர் பொருட்களை ஏவுவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
பாலஸ்தீனர்களுக்கு உணவு, தண்ணீர் சாத்தியமற்றதாகி விட்டது: ஐ.நா.
காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசியப்பொருட்களை கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது என ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காசாவிற்குள் கொண்டு செல்லப்படும் உணவுகளும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அளவை விட மிகக் குறைந்த அளவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வெப்ப அலை வீசத்துவங்கியுள்ள நிலையில் போதிய தண்ணீர் இன்றி பலியாகும் மக்களின் எண்ணிக் கை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.