2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக பிரதமர் மோடி நேற்று ஜப்பானில் இருந்து சீனா சென்றார். இதை தொடர்ந்து, பிரதமர் மோடி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இது இருநாடுகளின் உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்தியாவின் தலைமையில் நடக்கவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு சீனா முழு ஆதரவு அளிக்கும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், இருநாடுகள் இடையேயான எல்லை பிரச்சனைக்கு தீர்வு கண்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் இருவரும் ஆலோசித்தனர்.