world

img

தீக்கதிர் உலக செய்திகள்

போர் கப்பல் விபத்து : விசாரணைக்கு உத்தரவு 

வட கொரியாவில் புதிய போர் கப்பலை கடற்படை யில் சேர்க்கும் நிகழ்வில் விபத்து ஏற்பட்டது. விபத்திற்கு பின் நடத்தப்பட்ட சோ தனையில் கப்பலின் வலது பக்க மேல் பகுதியில் துளைகள் கண்டறியப்பட்டுள் ளது. இதன் வழியாக கடல்நீர் ஊடுருவி கப்பல் மூழ்கியது. கப்பலை கடலில் இறக்குவதற்கு முன்பான அறிக்கை யில் தகவல்கள்  சரியாக இருந்தும் விபத்து ஏற்பட்டுள் ளதால் இது குறித்து முழு விசாரணை நடத்த ஜனநாயக மக்கள் குடியரசு கொரியா (வட கொரியா) உத்தர விட்டுள்ளது.

சூடானில் மனிதாபிமான நிலைமை  மோசமடைந்துள்ளது : ஐ.நா 

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சூடானில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக ஐ.நா அவை எச்சரித்துள்ளது. உள்நாட்டுப் போரால் லட்சக் கணக்கான மக்கள் உள்நாட்டு அகதிக ளாக மாற்றப்பட்டுள் ளனர். மேற்கு கோர் டோஃபான் மாநிலத் தில் இந்த மாதம் மட்டும் சுமார் 47,000 மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட் டுள்ளனர். இதில் பலர் ஏற்கனவே உள்நாட்டில் இடம் பெயர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இடம் பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

செய்தி அனுப்புவதில்  குளறுபடி 

உலகம் முழுவதும் டிவிட்டர் எக்ஸ் பயனர்கள் செய்தி அனுப்ப முடியாமல் திணறல், நண்பர் கள் பிற பயனர்களுக்கு செய்தி அனுப்புவதற்கான வசதி வேலை செய்யவில்லை என புகார் தெரிவித்துள் ளனர். வியாழக் கிழமை துவங்கிய இப் பிரச்சனை வெள் ளிக்கிழமை தீவிர மான நிலையில் தொ ழில்நுட்ப கோளா றின் காரணமாக இந்த பிரச்சனை உருவானதா அல்லது  எலான் மஸ்க் இந்த வசதியை நீக்கிவிட்டாரா என பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.   

துன்பத்தில் அமெரிக்கர்கள் : பிற நாட்டை விமர்சிக்கும் டிரம்ப்

வீடற்ற நிலை, சுகாதார பிரச்சனைகளில் சிக்கி யுள்ளனர். இந்நிலையில் டிரம்ப் கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் பிரச்சனைகளை அறிந்து தீர்ப்பதற்கு பதில் பிறநாடுகளை விமர்சித்துக் கொண் டுள்ளார் என விமர்ச னங்கள் எழுந்துள் ளன. அமெரிக்கா வில் ஆயிரக்கணக் கான குழந்தைகள் பல்வேறு நோய் தொற்றாலும் சுகாதாரப் பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இந்த விமர் சனங்கள் எழுந்துள்ளன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பறிமாற்ற திட்டத்தின் கீழ் வெளி நாட்டு மாணவர்கள் வருவதற்கு டிரம்ப் அரசு தடை விதித்துள்ளது.  இதற்கு பல்கலைக் கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வன் முறை, யூத எதிர்ப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொ டர்புடைய நபர்கள் பல்கலைக்கழக வளாகத்தில்  இருந்தால் அதற்கு நிர்வா கமே முழுப்பொறுப்பு என அந்நாட்டின் உள்துறை செயலாளர் மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு பெரும் இழப்பாகும்.

11 வாரங்களுக்குப் பின் காசாவுக்கு நிவாரண உதவி வெறும் 90 லாரிகளை மட்டுமே அனுமதித்தது இஸ்ரேல் ராணுவம்

வெறும் 90 லாரிகளை மட்டுமே அனுமதித்தது இஸ்ரேல் ராணுவம்

காசா,மே 23- 11 வாரங்களுக்குப் பிறகு காசா வில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு நிவாரணப்பொருட்கள் அடங்கிய வாகனங்களை அனுமதித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். நிவாரண வாகனங்கள் காசாவிற்குள் அனு மதிக்கப்பட்டதை ஐ.நா மனிதாபி மான அமைப்பு உறுதிப்படுத்தி யுள்ளது. உணவு, மருந்துப் பொருட்கள், குடிநீர், தண்ணீர் சுத்திகரிப்பு மருந்து கள், மருத்துவமனைகளை இயக்கு வதற்காக எரிபொருள் என வாழ்வ தற்குத் தேவையான எந்த  அத்தி யாவசியப் பொருட்களையும் ஏறத் தாழ 80 நாட்களாக காசாவிற்குள் கொண்டு செல்ல விடாமல் முழுமை யாக இஸ்ரேல் ராணுவம் தடுத்து விட்டது. இதனால் ஒவ்வொரு பாலஸ் தீனரும் மிக மோசமான பட்டினியில் துன்பத்தை அனுபவித்து வருகின்ற னர்.  உணவுப் பாதுகாப்புக் குழு அறிக்கையின்படி, காசா முழுவதும் மக்கள் தீவிரமான பசி பட்டினியால் மடியும் அபாயத்தில் உள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பட்டினியின் விளிம்பில் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களு க்கு தேவைகள் மிக அதிகமாக உள்ள நிலையில் வெறும் 90 லாரிகளில் மட்டும் உணவு, மாவு, மருந்துகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களை அனுப்பியது போதுமானதல்ல எனவும் இவை பட்டினியின் விளிம் பில் உள்ள காசா மக்களை அதிலி ருந்து பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கத்திற்கு பயன்படாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.  தற்போது அனுமதிக்கப் பட்டுள்ள இந்த நிவாரணப்பொருட் கள் டெயர் அல் பாலா பகுதியில் உள்ள ஐ.நா அவையின் சர்வதேச குழந்தைகள் நிதியம் கிடங்கில் வைக்கப்பட்டு காசா முழுவதும் உள்ள ஐ.நா. நிவாரணப் பொருட்கள் விநியோகக் கிளைகளுக்கு அனுப் பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் உலக உணவுத் திட்ட அமைப்பின் உதவியுடன் காசா வின் தெற்கு மற்றும் மையப் பகுதிக ளில் உள்ள சில ரொட்டி தயாரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன.  சோதனைச்சாவடியில் இருந்து காசாவுக்குள் செல்லும் நிவாரண வாகனங்களும் ஐநா ஊழியர்களும் இஸ்ரேல் ராணுவத்தால் திட்டமிட்டு மிக கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால் பல மணிநேரம் அவர்கள் காக்க வைக்கப்பட்டு நிவாரணப் பொருட் கள் சென்று சேர வேண்டிய நேரம் வேண்டுமென்றே திட்டமிட்டு மேலும் தாமதமாக்கப்படுகின்றது.  இந்நிலையில் போதுமான நிவாரணப் பொருட்களை, பாதிக் கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என ஐநா அவை வலியுறுத்தி யுள்ளது.