world

img

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மாகாணத்திலும் வெவ்வேறு விதிமுறைகளின்படி தேர்தல் நேரம் கடைபிடிக்கப்படும் நிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் ஒவ்வொரு மாகாணமாக வாக்குப்பதிவு தொடங்கி வருகின்றது.

புதன்கிழமை காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பிலும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்பை கமலா ஹாரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்திவந்தார். இருந்தாலும் கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நிறைவடையும், இறுதிகட்ட வாக்குபதிவு புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நிறைவடையும். அதற்குப் பிறகுதான் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.