world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கல்வித்துறையை  ஒழித்துக்கட்டும் டிரம்ப் 

அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வித் துறை அமைச்சகத்தை இழுத்து மூடும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். இதற்கான அனைத்து வேலைகளையும் செய்ய கல்வி செயலாளர் லிண்டா மெக்மஹோனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி தலைவர்கள் அமெரிக்க கல்வி ஆணையர்கள் கலந்துகொள்ள உள்ள நிகழ்ச்சியில் இதற்கான கையெழுத்து போடப்படும் என கூறப்படுகின்றது. இதன் பிறகு ஒவ்வொரு மாகாணங்களும் தனித்தனியாக கல்வித்துறையை நிர்வகிக்கும் சூழல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் இயற்கையாக சுவாசிக்கின்றார்

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு மூன்று வாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல் நலம் நன்றாக முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக வெண்டிலேட்டர் மூலமாக செயற்கை சுவாச
த்தில் வைக்கப்படிருந்த அவர் தற்போது இயற்கையாக சுவாசிக்கும் நிலைக்கு வந்துள்
ளார் என வாடிகன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் எப்போது அவர் அன்றாட வாழ்க்கை நிலைமைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படவில்லை

மீண்டும் நேதன்யாகு  கூட்டணியில் பென் கவிர் .

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வா தியான பென் கவிர் மீண்டும் நேதன்யாகு கூட்டணியில் இணைந்துள்ளார். காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிர யூத வெறியரும் போர் வெறியருமான பென் கவிர் அக்கூட்டணியை விட்டு வெளியேறினார். தற்போது ஒப்பந்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் வான்வழி தரைவழி தாக்குதலை  மீண்டும் துவங்கியுள்ள நிலையில்  பென் கவிர் மீண்டும் நேதன்யாகுவுடன் இணை ந்துள்ளார்.

ராணுவத்திற்கு அதிக நிதி  ஐரோப்பிய நாடுகள் முடிவு

ஐரோப்பியப் பொருட்கள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் ராணுவத்திற்கான செலவை அதிகரிக்க முடிவெடுத்துள்ளன. ரஷ்யா- அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் உடனான போரை நிறுத்தும் முடிவிற்கு சென்றுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் இம் முடிவை எடுத்துள்ளன. மேலும் பணவீக்கம் பொருளாதார மந்த நிலை அதிகரித்துள்ள சூழலில் ஐரோப்பிய நாடுகளின் இம்முடிவு நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அப்பாவிகளின் கண்ணீர், ரத்தம் மூலம் வளரும் இஸ்ரேல்

இஸ்ரேல் அரசு தாங்கள் ஒரு தீவிரவாத நாடு என மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது என துருக்கி பிரதமர் எர்டோகன் விமர்சித்துள்ளார். மேலும் பாலஸ்தீன அப்பாவி களின் கண்ணீர் மற்றும் ரத்தத்தின் மூலம் அவர்கள் வளர்கின்றனர் என கண்டித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் அதிகமான அப்பாவிகள் படுகொலையானார்கள். இதில் சுமார் 100 க்கும் அதிகமானவர்கள் குழந்தைகளாவர்.