இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் உட்பட 23 நாடுகளில் போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக உற்பத்தி செய்து கடத்தப்படுகிறதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் ரசாயனங்கள் உற்பத்தி செய்து கடத்தும் நாடுகளின் பட்டியலை டிரம்ப் வெளியிட்டார். இந்த பட்டியலில், இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதில், ஆப்கானிஸ்தான், பொலிவியா, பர்மா, கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் தவறிவிட்டதாக குறிப்பிட்ட டிரம்ப், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த போதைப்பொருள் கடத்தலால் அமெரிக்காவில் அவசர நிலை உருவாகியுள்ளது. இதில், 18 முதல் 44 வயதுடைய அமெரிக்கர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் பொது சுகாதார நெருக்கடி என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.