தெலுங்கானா ஆயுதப் போராட்ட எழுச்சிப் பொதுக்கூட்டம் : எம்.ஏ.பேபி பங்கேற்பு
தெலுங்கானாவில் ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்கு எதிராக 1946 முதல் 1951ஆம் ஆண்டுகள் வரை கம்யூனிஸ்டுகளின் தலைமையில் விவசாயிகளின் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இது தெலுங்கானா ஆயுதப் போராட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தை பறைசாற்றும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலம் முழுவதும் செப்., 17 முதல் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜங்கமா, கம்மம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி உரையாற்றினார்.