விவசாய நிலத்தில் சுற்றுச்சாலை விரிவாக்கம் தெலுங்கானாவில் சிபிஎம் போராட்டம் ; தடுப்புக் காவலில் அடைக்கப்பட்ட மாநிலச் செயலாளர்
ஹைதராபாத் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் பிராந்திய சுற்றுச் சாலை (ஆர்ஆர்ஆர்) விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த சுற்றுச் சாலையை விரிவுபடுத்தினால் விவ சாயிகள் தங்கள் நிலங்களை இழந்து கடு மையாகப் பாதிக்கப்படுவார்கள். அதனால் சுற்றுச் சாலை விரிவாக்கத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறி விப்பை வெளியிட்டது. திங்கள்கிழமை அன்று போராட்டம் நடைபெற இருந்த நிலையில், போராட்டத்திற்கு முன்னதாக ஞாயிறன்று இரவு சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜான் வெஸ்லி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவ லில் வைக்கப்பட்டனர். இதனை கண்டித்து ஹைதராபாத் முழுவதும் சிபிஎம் ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட தலைவர்களை ஹைதராபாத் காவல்துறை விடுவித்தது. தொடர்ந்து ஹைதராபாத் எச்.எம்.டி.ஏ. அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற சுற்றுச் சாலை விரிவாக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஜான் வெஸ்லி, மாநில செயற்குழு உறுப்பினர் கள் சாகர் மற்றும் மு.ஜஹாங்கீர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் ஆர்ஆர்ஆர் திட்டத்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த மனுவை திட்ட அதிகாரிகளிடம் சிபிஎம் தலை வர்கள் சமர்ப்பித்தனர்.