டிரம்பின் அறிவிப்பு முக்கிய முடிவு – உர்சுலா வான்
பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளது முக்கியமான முடிவு என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் வரவேற்றுள்ளார். இந்த முடிவு உலக பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான ஒரு படி என்றும் வரவேற்றுள்ளார். வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகள் செயல்படுவதற்கு தெளிவான கணிக்கக்கூடிய நிலைமைகள் அவசியம். நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.