world

உலகச் செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவரும் காணொளி வாயிலாக உரையாடுவதற்கு ஒப்புக் கொண் டுள்ளனர். இருதரப்பு மற்றும் இருவருக்கும் தொடர்பு டைய சர்வதேச விவகாரங்கள் குறித்து இதில் பேசவிருக் கிறார்கள். ஈரான், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் பற்றி இருவரும் பேசுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி இன்னும் முடிவாக வில்லை.

சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் இராக்கில் அமெரிக்க ராணுவப் பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இராக் மற்றும் ஜோர்டானுக்கு அருகில் சிரிய எல்லையில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டது குறித்து சிரியாவின் அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. தாக்குதல்களில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயம் அடைந்ததாகவோ தகவல்கள் வெளியாகவில்லை.

மியான்மரில் பிப்ரவரி 1, 2021 அன்று ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஏற்கனவே நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்தி மக்க ளாட்சியைக் கொண்டு வரப் பாடுபட்ட ஆங் சான் சுகிக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளைத் தொடுத்தனர். அதற்காக சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. கொரோ னாவிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை அளித்து அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.