வடகொரியாவின் பாதுகாப்புக்கு நிச்சயம் உதவுவோம் : ரஷ்யா உறுதி
மாஸ்கோ, ஏப்.30- வடகொரியாவின் பாதுகாப்பிற்கும் அவர் களை தற்காத்துக் கொள்ளவும் ரஷ்யா கண் டிப்பாக உதவும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரி வித்துள்ளார். மேலும் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் வடகொரிய ராணுவ வீரர்கள் ஈடுபட்டதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். 2024 ஆகஸ்ட் மாதம் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமித்தது. அப்பகுதியை அந்நாட்டு ராணுவத்திடம் இருந்து விடுவிக்க வடகொரிய ராணுவ வீரர்கள் மூலம் தாக்குதல் நடத்தி முழு பகுதியையும் ரஷ்யா மீட்டது. ரஷ்யாவிற்கு வட கொரியா நேரடியாக வீரர்க ளை அனுப்பி போரில் உதவுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியபோது ரஷ்யா அதற்கு பதில ளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரைன் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட குர்ஸ்க் பிராந்தியத்தின் முழுமையான விடு தலைக்கு வட கொரிய ராணுவ வீரர்கள் நுணுக்கம், தைரியம், வீரம் ஆகியவற்றை காட்டியதாக ரஷ்ய ராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தெரிவித்திருந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வட கொரியாவிற்கு ராணுவ ரீதியிலான ஆதரவை கொடுக்க ரஷ்யா தயாராக உள்ளதா என பத்திரி கையாளர் கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக உதவுவோம் என பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் 2024 இல் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்னிலையில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக இரு நாடுகளின் எல்லைக்கு வெளியில் இருந்து இரு நாடுகளின் எல்லைக்குள் தாக்குதல் அரங்கேறும் போது, இரு நாடுகளும் நேரடி ராணுவ பாதுகாப்புப் பணிகளில் உதவுவது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்தகைய பாதுகாப்பு ஒப்பந்தங்களின்படி தேவைப்பட்டால் ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு உடனடியாக உதவிகளை வழங்க இரு நாடு களுமே கட்டுப்பட்டுள்ளன என அவர் குறிப் பிட்டார்.