world

img

தீக்கதிர் உலக செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நேதன்யாகு

ஏழு ஆண்டு போரை நிறுத்துவதற்கு  ஹமாஸ் முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை  நேதன்யாகு நிராகரித்துள்ளார். இஸ்ரேல் பணைய கைதிகளை விடுவிப்பது, இனப்படுகொலையை நிறுத்துவது, காசாவை மறு கட்டமைப்பு செய்வது என ஹமாஸ் முன் மொழிந்துள்ளது. ஆனால் இனப்படுகொலை போரை நிறுத்துவதற்கும் காசாவை மறுக்கட்டமைப்பு செய்வதற்கும் இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை.2023 முதல் 2025 வரை 5 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை நேதன்யாகு நிராகரித்துள்ளார்.

‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி  பலவீனமடைவது வருத்தம்’

உலகப் பொருளாதாரம் துண்டு துண்டாக உடைவதும், பலதரப்புவாதம் (அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சி) பலவீன மடைவது  குறித்தும் பிரிக்ஸ் கூட்டமைப்பின்  வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கவ லையை தெரிவித்துள்ளனர் என பிரேசில் தெரி வித்துள்ளது. மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரி சார்ந்த பிரச்சனையில் ஒத்த கருத்தை எட்டியுள்ளதாக பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் மௌரோ வியேரா  தெரிவித்துள்ளார்.

குடியேற்றக் கொள்கைகளில்  மாற்றம் : லிபரல் கட்சி திட்டம் 

கனடாவில் ஆட்சியை  கைப்பற்றி உள்ள மார்க் கார்னி  தலைமையிலான லிபரல் கட்சி அந்நாட்டின் குடியேற்றக்  கொள்கைகளில்  மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. 2027 இறுதிக்குள் தற்காலிகமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையை மக்கள் தொகையில் 5 சதவீதத்துக்கும் குறைவாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளனர். இதற்காக அவர்களை நிரந்தர குடிமக்களாக மாற்றுவது அல்லது அவர்களின் விசா காலம் முடிந்தவுடன் வெளியேற்றுவது என திட்டமிடுவதாகக் கூறப்படு கிறது.

குழந்தைகளுக்கு எதிரான  இணைய குற்றங்கள் 

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே பெரும் கவலை இருப்பது புதிய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. சுமார் 75 சதவீதமான நபர்கள் சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என 86 சதவீதமான நபர்கள்  அந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

கினியாவில் உணவுப்  பாதுகாப்பின்மை அதிகரிப்பு 

ஒரு ஆண்டிற்குள் கினியாவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதி கரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) அறிவித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான் உணவு பற்றாக்குறை மேலும் மோசமான நிலைமைக்குத் தள்ளியுள்ளது.  2024 செப்டம் பர் மாதம் அந்நாட்டில் கடுமையான  மழை வெள்ளம் காரணமாக  5,813 ஹெக்டேர் விவ சாய நிலங்கள் உட்பட மொத்தம் 125,221 ஹெக் டேர் விவசாய நிலங்கள் மூழ்கின.