நியூயார்க், செப்.4- அமெரிக்காவில் 10,000 க்கும் அதிகமான ஹோட்டல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைப்பளுவை குறைக்க அதிகப் பணி யாளர்களை நியமிக்க வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும், பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா முழுவதும் பல துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மோசமான பொருளா தார நெருக்கடியால் குழந்தைகளை பராமரிக்க முடியாமலும், குடும்பத்தை நடத்துவதற்கும், மாதாந்திர தவணைகளை ( EMI ) கட்டுவ தற்கும், உடல்நிலையை பாதுகாப்பதற்கும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கடந்த மாதங்க ளில் ஆட்டோ மொபைல் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் இது போன்ற போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தற்போது ஞாயிற்றுக்கிழமையன்று முதல் அமெரிக்க ஹோட்டல் தொழிலாளர்களும் போ ராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாஸ்டன், சான்பிரான்சிஸ்கோ, சான்டியாகோ, சான் ஜோஸ், சியாட்டில், கிரீன்விச் உள்ளிட்ட அமெ ரிக்காவின் பிரபலமான நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிய ஹோட்டல்களின் தொழிலாளர்கள் மட்டும் இன்றி நான்கு நட்சத்திர, ஐந்து நட்சத் திர ஹோட்டல்கள் மற்றும் அமெரிக்காவில் பிர பலமாக அறியப்படக்கூடிய கார்ப்பரேட்களு க்கு இணையான ஹில்டன், ஹையாட், மேரி யட் உட்பட மிகப்பெரிய ஹோட்டல்களில் உள்ள தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த ஹோட்டல்கள் கொரோனா காலத்தி ற்கு பிறகு மிக அதிகமான லாபத்தை அடைந்துள் ளன. எனினும் ஹோட்டல்களின் லாபத்திற்காக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு போதிய ஊதியமும், பாதுகாப்பும் செய்து கொடுக்க அவை மறுக்கின்றன. மேலும் ஹோட்டல் நிர்வாகங்கள் தொழிலாளர்களின் மீது வேலைப் பளுவை அதிகரித்துள்ளன.
கொரோனா காலமான 2019 முதல் 2022 வரை ஹோட்டல் பணியாளர்களின் எண் ணிக்கை 13 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும் ஒவ்வோரு வாரமும் ஒரு ஹோட்டல் தொழிலாளி குறைந்தது 70 முதல் 80 மணி நேரம் வேலை செய்கிறார். கோடை விடுமுறை காலம் உள்ளிட்ட பரபரப்பான வேலை நாட்க ளில் தொழிலாளர்களுக்கு வேலைப்பளு மேலும் அதிகமாக இருக்கும் என்று ஹோட்டல் தொழிலாளர்களுக்கான சங்கம் குறிப்பிட் டுள்ளது. மேலும் இதற்கு முன்பு பலமுறை கோரிக்கை வைத்தும் அதனை ஹோட்டல் நிர்வா கங்கள் ஏற்காததாலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.