world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சீனா, மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து  அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்கா

டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக  பதவியேற்ற உடனேயே  சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் மீது அதிக வரி விதித்தார். மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்கு மதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம், சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அந்நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன் அதற்குப் பதிலடி யாக அமெரிக்கப் பொருட்களுக்கு மாற்றாக பிற நாடுகளின் தயாரிப்புகளை வாங்கத்  துவங்கியுள்ளன. சீனாவும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில வரி விதிப்புகளை மேற்கொண்டுள்ளது.  அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு 15 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது. எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு பத்து சதவீதம் வரி விதித்துள்ளது.

அதே நேரத்தில் மற்ற நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதித்தால், அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவும் இறக்குமதி வரிகளை விதிக்கும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். 

 

இவ்வாறு டிரம்ப் சர்வதேச வர்த்த கப்போரை தூண்டி வரும் நிலை யில் சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளிடம் இருந்தே தொழில்துறை க்குத் தேவையான பொருட்களை அமெரிக்கா அதிகளவில்  இறக்குமதி செய்கின்றது என தெரிவிக்கப்பட்டுள் ளது.

2018 முதல் 2023 வரை சீனாவிலிருந்து அதிகளவு பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 18 சதவீதமாக வும், மெக்சிகோவின் பங்களிப்பு 14 சதவீதமாகவும், கனடாவின் பங்கு 15 சதவீதமாகவும் உள்ளது. 2018 முதல்  2023 வரையில் அமெரிக்கா சுமார் 17,000 டாலர் பில்லியன் மதிப்புள்ளபொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

இதில் மின்  உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் 14.18 சதவீதம், வாகனங்கள் 10.93 சதவீதம், அணு உற்பத்தி தொடர்பான இயந்திரங் கள் மற்றும் உபகரணங்கள் 9.12 சதவீதம் ஆகியவையும் அடங்கும். இது மட்டு மின்றி கனிமங்கள், தொழிற்சாலைகளுக்கான இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள், அறுவைச் சிகிச்சைக்கான கருவிகள், கரிம இரசாயனங்கள், பொம்மைகள், விலை மதிப்புள்ள கற்கள், உலோகங்கள் ஆகியவற்றையும் அமெரிக்கா வெளிநாடுகளி டமிருந்து இறக்குமதி செய்கின்றது.

மின் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள், அணு உலைக்கான இயந்திரங் கள், பிற இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்கள், ஆடைகள் ஆகியவை சீனாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. 

கனிமங்கள் இறக்குமதியில் சுமார் 40 சதவீதம் வரை கனடாவின் பங்களிப்பு உள்ளது.வாகன இறக்குமதியில் மெக்சிகோ சுமார் 32 சதவீதம் வரை பங்களிக்கின் றது, விலைமதிப்புள்ள கற்கள் மற்றும் உலோகங்களில் இந்தியா 15 சதவீதம் வரை பங்களிக்கின்றது.

2018-23-இல் அமெரிக்கா இறக்குமதி செய்துள்ள  பொருட்களின் விவரங்கள் (சதவீதத்தில்)

1.    மின்சார இயந்திரங்கள் 14.18
2.    வாகனங்கள் 10.93
3.    அணு ஆற்றல் தொடர்பான             இயந்திரங்கள் 9.12
4.    கனிமப் பொருட்கள் 8.18
5.    இயந்திரங்கள் 5.48
6.    மருந்துப் பொருட்கள் 5.13
7.    அறுவை சிகிச்சைக் கருவிகள்         3.64
8.    ஆடைகள் 3.05
9.    விலைமதிப்புள்ள கற்கள்,             உலோகங்கள் 2.89
10.    மரச்சாமான்கள் 2.59
11.    பிளாஸ்டிக் 2.52
12.    ஆர்கானிக் கெமிக்கல்ஸ் 2.18
13.    இரும்பு- எஃகு  1.66
14.    பொம்மைகள் 1.5
15.    ரப்பர் 1.2

கனிமங்கள் இறக்குமதியில் சுமார் 40 சதவீதம் வரை கனடாவின் பங்களிப்பு உள்ளது.வாகன இறக்குமதியில் மெக்சிகோ சுமார் 32 சதவீதம் வரை பங்களிக்கின்
றது, விலைமதிப்புள்ள கற்கள் மற்றும் உலோகங்களில் இந்தியா 15 சதவீதம் வரை பங்களிக்கின்றது.

மின்சார இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்


1.    சீனா 33.35
2.    மெக்சிகோ 17.50
3.    வியட்நாம் 7.66
4.    மலேசியா 6.93

அணு  ஆற்றல் தொடர்புள்ள இயந்திரங்கள் 
1.    சீனா 27.66
2.    மெக்சிகோ 16.98
3.    ஜப்பான் 8.28
4.    ஜெர்மனி 6.92

இயந்திரங்கள் மற்றும் இயந்திர பாகங்கள்

 
    1.    சீனா 21.24
    2.    மெக்சிகோ 17.99
    3.    ஜப்பான் 8.08
    4.    ஜெர்மனி 6.91
    5.    கனடா 6.35 

வாகனங்கள் மட்டும் உதிரி பாகங்கள் 


1.    மெக்சிகோ 32.97
2.    கனடா 15.36 
3.    ஜப்பான் 15.18  
4.    ஜெர்மனி 8.31

ஆடைகள் 


1.    சீனா 26.6
2.    வியட்நாம் 16.94
3.    பங்களாதேஷ் 7.89
4.    இந்தோனேசியா 5.30
5.    இந்தியா 5.13

 

விலைமதிப்புள்ள கற்கள் மற்றும் உலோகங்கள் 


    1.    இந்தியா 15.33
    2.    ஸ்விட்சர்லாந்து 13.28
    3.    தென் ஆப்பிரிக்கா 8.30
    4.    கனடா 8.07
    5.    இஸ்ரேல் 7.43