world

img

அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதை உறுதிசெய்க... சர்வதேச நிதியம், உலக வங்கி வலியுறுத்தல்....

வாஷிங்டன்:
அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் வலியுறுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பயன்பாட்டில் வந்தபோதிலும் பல நாடுகளில் இரண்டாவது அலை தாக்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வாஷிங்டனில் சர்வதேசநிதியம் (ஐ.எம்.எப்.) மற்றும் உலக வங்கியின் கூட்டம் நடைபெற்றது.

இதையொட்டி வளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதில் அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவது முக்கியமானது.  புதிய வகை கொரோனா பரவி வரும்
நிலையில், வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசிமுகாம்களை நடத்துவதற்கான தயார் நிலையை வலுப்படுத்த வேண்டும். பாதிக்கப்படக்கூடிய மக்களை சென்றடைவதற்கு ஒருங்கிணைந்த உத்திகளை உருவாக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இதுவரை இல்லாத வகையில் பொது சுகாதாரம், பொருளாதாரம், சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுக்கும், வாழ்வாதார த்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் வறுமை அதிகரிக்கிறது. ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்குகிறது. வளர்ச்சி ஆதாயங்களை மாற்றி அமைக்கிறது.கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் உலக வங்கி குழுவும், சர்வதேச நிதியமும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில் தடுப்பூசி உற்பத்தித்திறன், மருந்துகளை விநியோகம் செய்வதை ஆதரிப்பதற்கான முயற்சிகளை இரு மடங்காக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.