போர் காரணமாக உக்ரைனின் பொருளாதாரம் 45.1 சதவிகிதமும், ரஷ்யாவின் பொருளாதாரம் 11.2 சதவிகிதமும் சரிவைச் சந்திக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி ஞாயிறன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உக்ரைனை கடுமையாக எச்சரித்துள்ள உலக வங்கி, தொடர்ந்து போர் நீடித்தால் அது பெரிய பொருளாதார பாதிப்புக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது. மொத்த பிராந்தியமும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் 4.1 சதவிகிதமும், கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் 30.7 சதவிகிதமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. உக்ரைனின் பொருளாதாரம் இந்த ஆண்டில் 45.1 சதவிகிதத்திற்குக் குறையும் என்றும், இது கடந்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் கணித்ததை விட 10-35 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.2 சதவிதிம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2008 உலக பொருளாதார நெருக்கடியைவிட ஜரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பாதிப்பு அதிகம் இருக்கும். இது ரஷ்யாவில் 20 சதவிகிதம், உக்ரைனில் 75 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்படும் என்று ஜரோப்பா மற்றும் மத்திய ஆசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் அன்னா பிஜெர்டே தெரிவித்துள்ளார்.