காசாவில் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த சீனா வலியுறுத்தல்
காசாவில் தனது ராணுவத் தாக்குதல் களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வுக்கான சீன துணைத் தூதர் கெங் சுவாங் வலியுறுத்தியுள்ளார். மேலும் காசாவில் நடத்தப்படும் தாக்குதல் கிட்டத்தட்ட 700 நாட்களாக நீடித்து வருகிறது. இது காசாவை ஒரு கொடூர நரகமாக மாற்றிவிட்டது. 20 லட்சம் பாலஸ்தீனர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பேரழிவில் சிக்கியுள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெ.பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 2 குழந்தைகள் கொலை
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடத்தப்ப ட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 14 குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். மாணவர்கள் பள்ளி தேவாலய வழிபாட்டில் பங்கேற்றிருந்த போது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதுடன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள துப்பாக்கி கலாச்சாரத்தால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இவ்வாறு கொல்லப்படுகிறார்கள்.
செல்பி எடுக்கும் போது மரணம் : இந்தியா முதலிடம்
செல்பி எடுக்கும் போது மரணங்கள் அதிகம் ஏற்படும் நாடுகள் குறித்த பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பார்பர் லா என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 2014 மார்ச் முதல் 2025 மே வரை சுமார் 214 பேர் இந்தியாவில் செல்பி எடுக்கும் போது மரணமடைந்துள்ளனர். 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.'
காட்டுத் தீ தீவிரமடைய காலநிலை மாற்றமே காரணம்
காட்டுத் தீ தீவிரமடை வதற்கு காலநிலை மாற்றமே காரணமாக உள்ளது என புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் மழைப் பொழிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடுமையான வெப்பம் வீசி வருகிறது. இதனால் துருக்கி, கிரீஸ், சைப்ரஸ் ஆகிய நாடுகளில் தற்போது நிலவும் கோடை காலத்தில் அதிகமான இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிகிறது எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2.47 கோடி ஏக்கர் நிலங்கள் காட்டுத் தீயில் எரிந்து போயுள்ளது.
ரஷ்யா பதில் தாக்குதல் : உக்ரைனில் 14 பேர் பலி
உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு தலைநகர் கீவ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் டிரோன் தாக்குதல் பிரிவு தற்காலிக முகாமாக பயன்படுத்திய ஒரு வீட்டையும் ரஷ்யா குண்டு வீசி அழித்துள்ளது.
200 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை : ஐ.நா. அறிக்கை
நியூயார்க்,ஆக. 28 - உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இன்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என ஐ.நா அவை தெரிவித்துள்ளது. மேலும் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான இலக்கை எட்டும் பணி மிகவும் தொய் வடைந்துள்ளது என எச்சரித்துள்ளது. ஐ.நா.வின் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை யில், உலகளவில் நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆறுகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற வற்றில் இருந்து எடுக்கப்படும் நீரை நேரடியாக சுத்திகரிக்காமல் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளன. உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப் ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டு ஆய்வறிக்கை தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மை சேவைகளில் நிலவும் பற்றாக்குறை காரணமாக, கோடிக்கணக்கான மக்கள் நோய்த்தொற்று அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது. 2015 லிருந்து 96.1 கோடி பேர் சுத்தமான குடிநீரைப் பெறத் துவங்கியுள்ளனர். இதன் மூலம் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது 68 சத வீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரித்துள் ளது. கடந்த ஆண்டு சுத்தமான குடிநீர் கிடைக்காத 210 கோடி மக்களில் சுமார் 10.6 கோடி மக்கள் ஆறுகள், குளங்கள் ஆகியவற்றில் இருந்து நேரடியாக சுத்திகரிக்கப்படாத தண்ணீ ரைப் பயன்படுத்தியுள்ளனர். எனினும் கடந்த பத்தாண்டுகளில் இந்த அளவுகளில் 6.1 கோடி பேர் குறைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. எனினும் அதிகரித்துவரும் போர்கள், வன்முறைகள், பொருளாதாரத் தடைகள், பஞ்சம் உள்ளிட்ட காரணங்களால் 2030க்குள் சுத்தமான குடிநீர் உலகில் உள்ள அனை வருக்கும் கிடைக்கச் செய்வதற்கான இலக்கை உலக நாடுகள் எட்டுவது சாத்தியமற்றதாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த இலக்கை அடையக்கூடிய காலஎல்லை கடந்து சென்று விட்டது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.