முதல் காலாண்டில் சீன பொருளாதாரம் வளர்ச்சி
2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை யிலான முதல் காலாண்டில் சீனப் பொரு ளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ள தாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவின் தொழிற்சாலைகளில் செய்யப்படும் பொருள்களின் உற்பத்தி அளவு 7.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சீனாவின் தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. உற்பத்தி மட்டுமின்றி உள்நாட்டு சில்லரை விற்பனையும் 5.9 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நியூயார்க் நகரில் அம்பேத்கர் தினம்
நியூயார்க் நகரில் இனி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அம்பேத்கர் தினமாக கொண்டாடப்படும் என அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஐநா தலைமையகத்தில் திங்கள் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயர் அலு வலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை ஆணையர் திலிப் சவுகான், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆசிய நாடுகளில் தொடர் நிலநடுக்கம்
புதன்கிழமையன்று (ஏப்.16) இந்தியா, வங்க தேசம், ஆப்கானிஸ்தான், திபெத் ஆகிய நான்கு ஆசிய நாடுகளில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. புதனன்று அதிகாலை 3:50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.2 ரிக்டர் அளவில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 50 நிமி டங்களுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் 4:43 மணி அளவில் 5.9 ரிக்டர் அளவிலும் 5:07 மணிக்கு 2.9 ரிக்டர் அளவில் வங்கதேசத்திலும் 5:14 மணிக்கு இந்தியாவின் கிஷ்த்வாரில் 2.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகப்பெரிய பதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை
பெரு நாட்டின் நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாந்தா ஹுமாலா, அவரது மனைவி நாடின் எரெடியா ஆகி யோருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித் துள்ளது. “பண மோசடி” குற்றத்தில் கைதாகி இருந்த அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இருவரும் முன் விசாரணைக் காவலில் கழித்த 9 மாதங்கள், இந்த தண்டனையின் காலத் தில் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் பெரும்பான்மை வாக்குகள் அடிப்ப டையில் தண்டனை உறுதியானது.
சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் : டிரம்ப்
வரிப் பிரச்சனையில் இனி சீனா தான் பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்க ளிடம் தான் முடிவு இருக்கிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின், சீனாவிடம் தான் முடிவு எடுக்க வேண்டிய பொறுப்புள்ளது. அவர்கள் தான் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமே தவிர, நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறி யுள்ளார்.