world

img

தீக்கதிர் உலக செய்திகள்

வங்கதேச வன்முறை பலி  1400-ஐ தாண்டும் : ஐ.நா

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் உருவாக்கப்பட்ட கலவரத்தில் 1,400 பேர் படுகொலை செய்யப்பட்டி ருக்கலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குச் சமமான உரிமை மீறல்களில் வங்கதேச அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய தேவை யுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் இந்த படுகொலைகளுக்கு பல்வேறு நம்பகமான ஆதா ரங்களை மேற்கோள் காட்டியுள்ளது.

இலங்கையில் மின் உற்பத்தி திட்டத்தை  கைவிட்டது அதானி நிறுவனம்

442 மில்லியன் டாலர் மதிப்பிலான சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்தை இலங்கை யில் திரும்பப்பெறுவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பெறுவதற்காக ஊழல் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் சுற்றுச் சூழலுக்கு பெரிய பாதிப்பை உருவாக்கும் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள இடதுசாரி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அத்திட்டத்தை மறுபரி சீலனை செய்ய உள்ளதாக தெரிவித்திருந்த நிலை யில் அதானி நிறுவனம் திட்டத்தை கைவிட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு  மோசமான ஆண்டு 2024 

2024 இல் உலகம் முழுவதும் 124 பத்திரி கையாளர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு 18 நாடுகளில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதில் சுமார் 70 சதவீதமான (85) பத்திரிகையாளர்கள்  இஸ்ரேல் தாக்குதலில் கொலையாகியுள்ளனர். இந்த அமைப்பின் ஆய்வுப்படி 30 ஆண்டுகள் இல்லாத வகையில் தற்போது தான் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் மீண்டும் தாக்குதலை  துவங்க தயாராகும் இஸ்ரேல்

காசாவில் மீண்டும் தாக்குதலை துவங்க கூடுதல் ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி யுள்ளது இஸ்ரேல். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் காசாவிற்குள் தாக்குதல் நடத்திய நிலை யில் பணயக்கைதிகளை அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுவிக்கப்போவதில்லை என ஹமாஸ் அமை ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வில்லையெனில் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய் யப்படும். தாக்குதல் நடத்தப்படும் என டிரம்பும், நேதன் யாகுவும் மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

புடின் - டிரம்ப் சந்திப்பு  விரைவில் நடைபெற உள்ளது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சவூதி அரேபியாவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட பிறகு, சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்திப்பிற்கான தேதி நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் இந்த சந்திப்பிற்கு நீண்டகாலம் எடுக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சவூதி அரேபியாவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட பிறகு, சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்திப்பிற்கான தேதி நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் இந்த சந்திப்பிற்கு நீண்டகாலம் எடுக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.