அல்கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு கரணமான ஒசாமா பின்லேடன், கடந்த 2011-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ படையினரால், கொல்லப்பட்டதை அடுத்து, அல்கொய்தா அமைப்பின் தலைவராக அய்மன் அல்-ஜவாஹிரி செயல்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, அல்-ஜவாஹிரி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்றிரவு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அல்- ஜவாஹிரியின் வீட்டில் , இரண்டு ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்க படையினர் நடத்தினர். இந்த தாக்குதலில், அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.