நியூயார்க்:
நிறவெறி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளி னால் தடுப்பூசி விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் 45 சதவீத தடுப்பூசிகளை பணக்கார நாடுகள் வைத்துள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நிறவெறி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் தடுப்பூசி விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் அப்படியானவொரு மோசமான நிலைப்பாட்டில் உள்ளது. புள்ளிவிவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், உலகில் தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளில், 45 சதவீத தடுப்பூசியை உலகில் 15 சதவீத மக்களை மட்டுமே கொண்டிருக்கும் பணக்கார நாடுகள் வைத்துள்ளன. மக்கள் தொகையில் 50 சதவீத மக்களைகொண்டிருக்கும் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடுகளுக்கு 17 சதவீத தடுப்பூசிகளே கிடைத்துள்ளன என்று தெரிவித்தார்.