மும்பை:
மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கின் கணினியைஹேக் செய்து பொய்யான ஆவணங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க தடயவியல் நிறுவனமான பாஸ்டனில் உள்ள ஆர்சனல் கன்சல்டிங் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுரேந்திராவின் கணினியை மின்னஞ்சல் வழியாக ஹேக் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு பிப்ரவரி29ம் தேதி ஹேக்கர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது சில ஆவணங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகியிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சுரேந்திராவின் கணினி மட்டுமல்லாமல் பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பலரது மின்னஞ்சல் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்டான் சுவாமி, சுரேந்திரா உள்ளிட்ட 16 பேர் மீதான புகாரில் முக்கிய ஆதாரமாக விளங்குவது அவர்களின் கணினியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்தான்.தற்போது இந்த கணினிகள் ஹேக் செய்யப்பட்டதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. 16 பேரையும் வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சதி செய்து,இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.