ஜெனீவா:
இந்த ஆண்டின் இறுதிக்குள் 30 சதவீத மக்களுக்குகொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து கொரோனாபரவலைக் கண்காணித்து வருகிறோம். இன்னும் பல நாடுகள் ஆபத்தில்தான் உள்ளன. கொரோனா தடுப்பூசி களை முழுமையாகச் செலுத்தாமல் தளர்வுகளை அமல்படுத்துவது ஆபத்தில் தான் முடியும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள்தொகையில் 10 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தவேண்டும். வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 30 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.