world

img

துருக்கி: உச்சத்தை தொட்ட பணவீக்கம்  

 

துருக்கியை ஆளும் ஜனாதிபதி தையிப் ஏர்டோகன் தலைமையிலான அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக அந்நாட்டில் பணவீக்க விகிதம் கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் நாணயமான லிரா கடந்தாண்டில் மட்டும் டாலருக்கு நிகராக 44 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது, 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் டாலருக்கு நிகரான லிராவின் மதிப்பு 7.4 ஆக இருந்தது. ஆனால், கடந்தாண்டின் இறுதியில் டாலருக்கு நிகரான மதிப்பு 13 லிராவாக சரிந்துள்ளது.

இதேபோல், அந்நாட்டு வரலாற்றின் உச்சபட்ச பணவீக்கமாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அளவீடானது 33.45 ஆகும். ஆனால், இந்த அதிகப்பட்ச அளவையும் தாண்டி தற்போது 36.1 சதவிகிதமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டில் பால், சமையல் எண்ணெய், இறைச்சி உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல், சமையல் எரிவாயு, மின்சார கட்டணம் உள்ளிட்டவைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.