காபூல்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும் தீவிரவாத அமைப்பான தலிபான்களுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. 8-க்கும் மேற்பட்ட நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அரசு ஆதரவு படைகளை ஒன்று திரட்டுவதற்காக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அதிபர் அஷ்ரப் கனி வடக்கு பகுதியில் உள்ள நகரான மசார்-இ- ஷரீஃபுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வுக்கு பின்னர் அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் வாலி முகமது அகமதுசாய் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ராணுவ தளபதி யார் என்பதை இன்னும் ஆப்கான் அரசு அறிவிக்கவில்லை. இந்த தகவலை பிபிசி உறுதி செய்துள்ளது.
தினமும் ஒவ்வொரு பகுதியாக தலிபான்கள் முன்னேறி வரும் நிலையில், ராணுவ தளபதி மாற்றம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.