மேற்கு காபூலில் இரண்டு இடத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. முதலாவதாக மும்தாஜ் பள்ளியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து தலைநகரின் தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் உள்ள ரஹீம் ஷாஹிக் பள்ளிக்கு அருகே இரண்டாவது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பள்ளிகளுக்கு அருகே இரண்டு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.