ஜகார்தா,பிப்.14- ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவின் பொதுத் தேர்தல் பிப்.14 அன்று 8,20,000 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. சுமார் 17,000 தீவுகளைக் கொண்ட அந்நாட்டின் 575 நாடாளுமன்ற தொகுதிகளில் 18 தேசிய அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.
ஜனாதிபதி , துணை ஜனாதிபதி , நாடாளு மன்ற மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளையும் ஒரே நாள் தேர்தலில் அந்நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். 75 நாட்கள் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமை முடிவ டைந்த நிலையில் பிப்ரவரி 14 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் துவங் கியபோது ஜகார்த்தா மற்றும் ஜாவா உள் ளிட்ட நகரங்களில் கடும் மழைப்பொழிவு, வெள்ளம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது. எனினும் வாக்குப்பதிவில் எந்த தொய்வும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்தல் தற்போதைய பாது காப்புத் துறை அமைச்சர் பிரபோவோ சுபி யாண்டோ, ஜகார்த்தாவின் முன்னாள் கவர் னர் அனிஸ் பஸ்வேடன் மற்றும் முன்னாள் மத்திய ஜாவா கவர்னர் கஞ்சர் பிரனோவோ ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டியாக அமைந்துள்ளது. அதிகபட்ச வரம்பான 2 முறை ( பத்து ஆண்டுகளாக) ஜோகோ விடோடோ ஜனாதிபதியாக பதவி வகித்த பிறகு தலைமை மாற்றத்தை இந்த தேர்தல் கொடுக்க உள்ளது. 27 கோடி மக்கள்தொகையில் 20.4 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்காளர்க ளாக உள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட வாக்கா ளர்களில் ஆண்கள் 49.91 சதவீதம், பெண் கள் 50.09 சதவீதமாக உள்ளனர். 17 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பெரும் பான்மையாக உள்ளனர் என பொதுத் தேர் தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பாது காப்புத்துறை அமைச்சர் பிரபோவோ சுபி யாண்டோ வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் முன்னிலை வகித்தார். வாக்குப்பதிவு அன்றும் மாதிரி வாக்கு எண் ணிக்கையில் எந்த மாற்றமும் இன்றி அவரே முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தோனேசிய சர்வே சர்க்கிள் தகவலின் படி, இரவு 7 மணியளவில் (சிங்கப்பூர் நேரப் படி) எண்ணப்பட்ட 90.4 சதவீத மாதிரி வாக்கு களில் பிரபோவோசு பியாண்டோ 58.45 சதவீத வாக்குகளுடன் முன்னணியில் உள் ளார்,அனீஸ் பஸ்வேடன் 24.99 சதவீதமும், கஞ்சர் பிரனோவோ 16.55 சதவீத வாக்கு களும் பெற்றுள்ளனர். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட் பாளர்கள் வெற்றி பெற ஒவ்வொரு மாகாணத் திலும் 50 சதவீத வாக்குகளையும் , குறைந்த பட்சம் 20 சதவீத வாக்குகளையும் பெற வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு அக்டோபர் மாதம் பதவி ஏற்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.