இந்திய நிறுவனங்கள் மீது விசா கட்டுப்பாடு
இந்தியாவில் உள்ள பயண நிறுவனங்கள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிறுவனங்கள் சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவுவது, தனிநபர்கள் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைவதற்கு உதவுதல், மனித கடத்தலுக்கு உதவுவதாக குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. இதற்கு உதவிய பயண நிறுவனங்க ளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. ஆனால் நிறுவனங்களின் பெயர்களை அமெரிக்கா வெளியிடவில்லை.
ஜப்பான் பொருளாதாரம் மோசமாகி விட்டது
ஜப்பான் பொருளாதாரம் கிரீஸ் நாட்டை விட மோசமாக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஷிகெரு இஷிபா தெரிவித்துள்ளார். ஜப்பான் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகளிடமும், சர்வ தேச நாணய நிதியத்திடமும் கடன் வங்கி குவித் துள்ளது. இந்நிலையில் நுகர்வு வரி உள்ளிட்ட வரிகளைக் குறைக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்த துவங்கியுள்ளன.
இஸ்ரேலுடனான வர்த்தகப் பேச்சு: இங்கிலாந்து இடைநிறுத்தம்
இஸ்ரேலுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை யை இடைநிறுத்துவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி அறிவித்துள்ளார். மேலும் காசா மீதான ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் விரிவுபடுத்தி வருவது தொடர்பாக இஸ்ரேல் தூதரை அழைத்து அந்நாட்டின் செயல்பாடு மற்றும் காசாவில் சட்டவிரோதமாக இஸ்ரேல் மக்கள் குடியேறுவதை அந்நாட்டு அரசு ஆதரிப்பதன் காரணமாக “உங்கள் அரசாங்கத்துடனான எங்கள் உறவு மோசமடைகிறது” என்றும் லாமி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷலாக நியமனம்
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பீல்டு மார்ஷலாக நியமிக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந் நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்தியாவுட னான மோதலில் அந்நாட்டு ராணுவத்தை சரி யாக வழி நடத்தியதற்காக இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஃமார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு இரண்டாவது நபராக அசிம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சீனா மீது அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் தோல்வி
அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஏற்றுமதிகள் மீது டிரம்ப் விதித்த கட்டுப்பாடுகள் தோல்வியடைந்ததாக என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங் தெரி வித்துள்ளார். தைவானில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ஹுவாங் சீனாவில் என்விடியாவின் சந்தைப் பங்கு ஜோ பைடனின் ஆட்சி துவக் கத்தில் 95 சதவீதத்தில் இருந்தது. தற்போது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது என தெரி வித்துள்ளார்.
ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் இலங்கை அரசு
இலங்கை முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழலைத் தடுக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இலங்கை ஜனாதிபதி அனுர குமார திச நாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சி அமைத்த உடன் முன்னாள் ஆட்சி யாளர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக் கப்படும் எனவும் நாட்டில் நடைபெறும் ஊழல் தடுக்கப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அந்நாட்டின் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) அரசு நிறுவனங்களில் உள்நாட்டு விவகாரப் பிரிவுகளை அதிகரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்நாட்டின் அரசு தலைமை அலுவல கங்கள், காவல் நிலையம், உள்ளாட்சி அமைப்பு களில் புதிய உள்நாட்டு விவகாரப் பிரிவுகள் அமைக்கப்படும் என ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முடிவின்படி ஏற்கனவே அமைச்சர் அலுவலகங்கள், அரசு நிறுவனங்களில் செயல்பட்டு வரும் 100 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விவகாரப் பிரிவுகளை மேலும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகள், தேசிய ஊழல் தடுப்பு திட்டம் (2025–2029) இன் கீழ் ஜனாதிபதி அலுவ லகத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ளன. அரசு நிறுவனங்களில் ஊழலைக் குறைத்து, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரிவுகளில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதனுடன் ஊழல் புகார் தொடர்பான கேள்விகளையும் பதிவு செய்ய லாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் ஊழல் புகார்களை விசாரிப்பதுடன் ஊழல் நடைபெறுவதை முன்கூட்டியே கண்ட றிந்து தடுக்கும் நடவடிக்கைகளையும் முன்னெ டுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் முழுவதையும் பதிவு செய்து ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணை யம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தொடர்ந்து அறிக் கைகளை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.