world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாலஸ்தீனர்கள் படுகொலையை  உலகம் பழகி விட்டது: இஸ்ரேல்  

நாங்கள் 100 பாலஸ்தீனர்களை படுகொலை செய்தோம். இந்த உலகம் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் உலகமே அதற்கு பழகிவிட்டது என இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் டிசிப்பி ஸ்காட் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பாலஸ்தீனர்கள் மீதான வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு இரவிலும் 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகொலையாகிறார்கள். தற்போது தரைவழித்தாக்குதலையும் தீவிரப்படுத்துகிறது இஸ்ரேல்.  

ஜோ பைடனுக்கு   புரோஸ்டேட் புற்றுநோய்  

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு  “புரோஸ்டேட் புற்றுநோய்” இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. அது அவரது எலும்புகளுக்கு பரவியுள்ள தாகவும் அவரது அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதிப்பு தீவிரத்தன்மையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை எடுப்பது குறித்து ஜோ பைடனும் அவரது  குடும்பத்தினரும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

ரொமேனிய ஜனாதிபதி தேர்தல் : தீவிர வலதுசாரி தோல்வி  

ரொமேனிய ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளரை வீழ்த்தி அந்நாட்டு தலைநகராக இருந்த புக்கா ரெஸ்ட் நகரத்தின் மேயரான நிகுசர் டான் வெற்றி பெற்றுள்ளார். தீவிர நேட்டோ ஆதரவாளராக உள்ள டான் சுமார் 54 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். டிரம்ப் ஆதரவா ளரான வலதுசாரி ஜார்ஜ் சிமியோன் 46 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். டிரம்பின் தீவிர ஆதரவாளரான சிமியோன் அவரை போலவே ஆட்சி செய்வேன் என கூறி இருந்தது குறிப்பி டத்தக்கது. 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை  வழக்கறிஞர் வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் முடக்கம்

அமெரிக்காவின் உத்தரவுதான் சர்வதேச சட்டமா ?

ஹேக்,மே19- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கானின் மின்னஞ்ச லும் வங்கிக் கணக்குக ளும் முடக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மீது தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச நீதி மன்றத்தில் இனப்படுகொலை வழக்கு தொடுத்திருந்தன. இந்த வழக்கில் 2023 நவம்பர் மாதம் சர்வ தேச குற்றவியல் நீதிமன்ற  நீதிபதிகள் இஸ்ரே லின் இனப்படுகொலையை உறுதி செய்தது டன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாது காப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகிய இருவருக்கும்  கைது  உத்தரவை பிறப் பித்தார்.    காசாவில் ஹமாசுக்கு எதிரான நடவ டிக்கை என்ற பெயரில் பாலஸ்தீனர்களுக்கு கொண்டு செல்லும் உணவு, மருந்துகள் உள்ளிட்ட ஐ.நா நிவாரணப் பொருட்களை தடுப்பதன் மூலமாக இஸ்ரேல்ராணுவம் வேண்டுமென்றே பாலஸ்தீனர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்கிறது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இனப்படுகொலைக்கும் இனப்படுகொலையை தொடர்ந்து செய்து வரும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கும் ஆதரவாக கடந்த பிப்ரவரி மாதம் அமெ ரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதன் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் மற்றும் சர்வதேச நீதிமன்றத்தை சேர்ந்த 900 ஊழி யர்கள் உள்ளிட்டவர்கள்  மீது தடைகளை விதித்தார்.  அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய  தடை இருப்பதுடன் கானுக்கு தொழில்நுட்ப உதவி, சேவை வழங்கும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதன் காரணமாக  மைக்ரோ சாப்ட் நிறுவனம் அவரது மின்னஞ்சல் சேவையை முடக்கி விட்டது.  இதன் காரணமாக சில அரசு சாரா நிறு வனங்கள்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்து டன் இணைந்து பணியாற்றுவதை நிறுத்தி விட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகளின் மின்னஞ்சல்களுக்கு கூட பதிலளிக்கக் கூடாது என்ற நிலைக்கு சில அமைப்புகள் சென்று விட்டன. இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் கொடுத்த பேட்டியின் அடிப்படையில் இவை இதுவரை வெளியான சில நெருக்கடிகள் மட்டும் தான். இதை விட நெருக்கடிகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.    டிரம்ப்பின் இந்தத் தடைகள் “பாதிக்கப்பட்ட வர்கள் நீதி பெற எடுக்கும் முயற்சிகளை கடு மையாகத் தடுக்கும்” என்று மனித உரிமை கள் கண்காணிப்பகத்தின் சர்வதேச நீதி இயக்குநர் லிஸ் ஈவன்சன் கண்டித்துள்ளார்.