அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம், மே 21- ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும் பப்பெற வேண்டும், என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசு தொடர்ச்சியாக தொழிலாளர் நலனுக்கு விரோதமான சட்டங் களை அமல்படுத்தி வருகின்றது. இதனைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 9 ஆம் தேதியன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், செவ்வா யன்று கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியி லுள்ள ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட்டச் செயலாளர் கோவிந்தன், மாவட்டக்குழு உறுப்பினர் பன் னீர்செல்வம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சம்பத், ஏஐசிசிடியு செயலாளர் வேல்முருகன் உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், என வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் 29 மையங்களில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.கணபதி, மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர், மாநிலக்குழு உறுப்பினர் பி.தங்கவேல், நிர்வாகிகள் சின்ராஜ், சி.எஸ்.பழனியப்பன் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.